சப்பாத்திக்கள்ளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..



Cactus fruit benefits

வறண்ட நிலப்பரப்பில் வளர்ந்து வரும் செடிதான் சப்பாத்திக்கள்ளி. இந்த செடியின் வளரும் பழத்தில் பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மேலும் குழந்தை இல்லாதவர்கள் கூட இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

Cactus

சப்பாத்திக்கள்ளி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், தாவர ஊட்டச்சத்துக்கள், பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது.

சிவப்பு நிறத்தில் இனிப்பு சுவையில் இருக்கும் சப்பாத்தி கள்ளி பழம் உடலுக்கும் பல நன்மைகளை தருகின்றது. ஆடு மேய்ப்பவர்களும், பழங்குடியின மக்களும் இந்த பழத்தை உணவுகளில் ஒன்றாக தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

Cactus

பொட்டாசியம் அதிகமாக இருக்கும் சப்பாத்தி கள்ளி பழத்தில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் சீராக வைக்க உதவுகிறது. பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் உயிர் அணுக்களை சீராக வைக்க உதவுகிறது.