காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
காலிஃப்ளவரில் ஈஸியான, சுவையான சட்னி.. டேஸ்ட் சும்மா அள்ளும்.!
காலிஃப்ளவரில் சுவையான சூப்பரான சட்னி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - அரை கப்,
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஐந்து
கருவேப்பிலை
உப்பு
இஞ்சி
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில், காலிஃப்ளவரை போட்டு அதில் உப்பு மஞ்சள் தூளை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின்னர் அதில் நறுக்கிய காலிபிளவர், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின் இறக்கி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்து தாளித்தால் சுவையான காலிபிளவர் சட்னி ரெடி. இந்த சட்னியை முழுசாக அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, பகுதி அளவு அரைத்தாலே போதும்.
குறிப்பு : இதை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.