அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை ரெசிபி.! இனி வீட்டிலேயே செஞ்சு அசத்துங்க.!
அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவாகும். இந்த மட்டனில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 1/4 கி மட்டன் கொத்து கறி, 1/2 கப் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 2 துண்டு இஞ்சி, 1 கொத்து கறிவேப்பில்லை, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, உப்பு மிளகாய், 1 வர மிளகாய், 1/2 டீஸ்பூன் சோம்பு, 2 பட்டை, 3 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை, 1 முட்டை, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 டேபிள் ஸ்பூன் அவல்
செய்முறை: முதலில் மட்டனை நன்கு அலசி விட்டு ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். அவலை நன்கு வறுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வரமிளகாய், பட்டை, சோம்பு, வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் வேகவைத்த மட்டன், பொட்டுக்கடலை சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு பவுளுக்கு மாற்றி இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பின் வறுத்து பொடி செய்த அவலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மட்டன் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மட்டன் கோலா உருண்டை ரெடி.