"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் கார சட்னி.! சிம்பிள் ரெசிபி.!
இட்லி, தோசைக்கு ஏற்ற பக்காவான செட்டிநாடு கார சட்னி இனி இப்படி செய்து பாருங்கள் ஒரு இட்லி சாப்பிடுற இடத்துல நாலு இட்லி சாப்பிடுவாங்க உங்க குழந்தைங்க. வாங்க அந்த சிம்பிள் ரெசிபி எப்படி என்று பார்க்கலாம்....
தேவையான பொருட்கள்:1 கப் சின்ன வெங்காயம், 2 பெரிய வெங்காயம், 3 தக்காளி, 5 வர மிளகாய், 2 டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள், 5 பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 கொத்து கறிவேப்பிலை, எண்ணெய் தேவையான அளவு,
செய்முறை: முதலில் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.புளி நெல்லிக்காய் அளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, வெங்காயம், வர மிளகாய், மிளகாய்த்தூள், பூண்டு, உப்பு, சீரகம், புளி சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் செட்டிநாடு ஸ்டைல் கார சட்னி தயார்.