மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்காக ரசிகர்கள் சண்டையிடுவது மோசமானதாக உள்ளது" மணிரத்தினம் கருத்து..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கியவர் மணிரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
80களின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை திரைப்படங்களை இயக்கி வரும் மணிரத்தினம், சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மணிரத்தினம், விஜய் அஜித் போன்ற நடிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மோசமாக சண்டை போட்டுக் கொள்கின்றனர். இது தெருவில் நின்று கத்துவது போல் இருக்கிறது.
நடிகர்களுக்காக இந்த அளவிற்கு சண்டை போடுவது உணர்ச்சிபூர்வமாக இல்லை. இது சரியான செயலும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.