மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிக்கடி பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!
அடிக்கடி பிரியாணி சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு காரணம் பிரியாணியில் அதிக அளவு கலோரிகள், உப்பு, சோடியம் மற்றும் கொழுப்பு உள்ளது. எனவே அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் ஏற்படும் உடல் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிரியாணியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளதால், கொழுப்பு சத்தின் அளவை அதிகரிக்கும். இதனால், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பிரியாணியில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
பிரியாணியில் கலோரிகள் அதிக அளவில் உள்ளது. எனவே அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நீரிழிவு, இதய நோய் மற்றும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்த வழி வகுக்கும்.
பிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்களால் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரிக்கும். அதேபோல், பிரியாணியில் அதிகளவில் எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.