மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இந்த பழங்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதா.. உயிருக்கே ஆபத்தாகும் பழங்கள்.!
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற பல உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைப்பது பலரது வீட்டிலும் நடக்கும் சாதாரண நிகழ்வு ஆகும்.
ஆனால் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்க கூடாது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் ஒரு சில பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது அவை உடனடியாக கெட்டுப்போய் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
எந்தெந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் உயிருக்கே ஆபத்து என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க?
வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அவை விரைவில் கருமை நிறம் உடையதாக மாறி அதிலிருந்து வெளிவரும் எத்திலின் வாயு அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை விஷத்தன்மையாக்கும்.
இதேபோன்று தர்பூசணி, ஆப்பிள், லிச்சி, மாம்பழம், எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களையும் குளிர்சாதன பெட்டியில் வைப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அமிலம் அதிகம் உடைய பழங்களை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மற்ற பழங்களும் அமிலத்தன்மையுடையதாக மாறிவிடும்.