"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?!
அனைவருக்கும் முட்டையில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால், அதை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் விளைவிக்கும் என்பதில் பெரிய அளவிலான மாற்று கருத்து இருப்பதில்லை. மேலும் இந்த முட்டையை சாப்பிடுவதால், இதயம் குறித்த நோய் அதிகமாக ஏற்படும் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், நாள்தோறும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கமா? அல்லது தீமையை விளைவிக்குமா? என்ற சர்ச்சைக்கான பதில் இதுவரையில் நாம் யாருக்கும் தெரியாது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். நாள்தோறும் சராசரியாக முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்திருக்கிறது. என்பது ஒரு ஆய்வின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. முட்டையை தனியாக உட்கொள்ளும் போது உடலுக்கு தேவைப்படும் சத்து கிடைப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
மேலும் உடலில் ஹச்.டி.எல் என்ற அமில சுரப்பை அதிகரித்து, கொழுப்பை கரைக்க உதவி புரிகிறது. மேலும் பசியையும் கட்டுக்குள் வைக்கிறது. இதில் கலோரிகள் அளவு குறைவு என்பதால், உடல் எடையும் கட்டுக்குள்லிருக்கும்.
அதேபோல முட்டையின் விட்டமின் பி, அயோடின் விட்டமின் டி மற்றும் உயர்தர புரதம் போன்றவை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு முட்டைகள் இதய நோய்க்கான ஆபத்து ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருப்பதாக சொல்லப்படவில்லை.
முட்டைகள் அதீத சத்துக்களை தன்னகத்தே கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மிகக் குறைவான விலையில் இந்த முட்டைகள் கிடைக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் நிலையான சத்துக்களை கொண்ட முட்டை இயற்கையான மல்டி விட்டமின் என்று கூறப்படுகிறது. மேலும் முட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு சத்தான உணவு என எந்தவிதமான சந்தேகத்திற்குமிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் உயர்தர புரதம், விட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் நல்ல மூலமாகவும் இந்த முட்டை கருதப்படுகிறது. முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை கண் ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. நாள்தோறும் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை வழங்கும் என்று சொல்லப்படுகின்றது.