மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாரக்கணக்கில் தோசை மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துறீங்களா?.. பேராபத்து.. இதை தெரிஞ்சிக்கோங்க.!
தோசை மாவை பலரும் அரைத்து பிரிட்ஜில் வைத்து வாரக்கணக்கில் உபயோகம் செய்து வருகின்றனர். அவை மிகவும் தவறு. காலையில் தோசை மாவு அரைத்தால், மறுநாள் காலை இட்லி சுட்டு சாப்பிடலாம். மாலை தோசை சுட்டு சாப்பிட்டு, அவை மீதம் இருந்தால் அதற்கு அடுத்தநாள் காலை மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும்.
அதற்கு மேல் தாண்ட கூடாது. இதுவே நீளமான காலம். தோசை மாவை பிரிட்ஜில் வைத்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் மாவை உபயோகம் செய்ய கூடாது. அது உடல்நலனுக்கு கேடு. ஒருநாள் தோசை மாவை பயன்படுத்துவது நல்லது.
மாவை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைத்தால், புளிக்கும் தன்மை மாறும். பிரிட்ஜில் எந்த பொருளாக இருந்தாலும், 3 முதல் 4 நாட்களுக்கு மேல் வைக்க கூடாது. 4 நாட்களை கடந்து தோசை மாவு பயன்படுத்தப்பட்டால், அவை பார்க்க நன்கு இருப்பது போல தோன்றும்.
ஆனால், அதனுள் கிருமிகள் உருவாகிவிடும். அவை நமக்கு எந்த மாற்றத்தையும் வெளிப்படுத்தாது. ஆனால், பாக்டீரியாக்கள் கட்டாயம் வளரும். 4 நாட்களுக்கு மேல் கட்டாயம் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும் என்பதால், அதனை பயன்படுத்தினால் உடலுக்கு கேடு உண்டாகும்.
இவ்வாறான உணவுகளை நாம் பயன்படுத்துவது உடலில் இருக்கும் நல்ல கிருமிகளை அழிக்கும். பிரிட்ஜில் வைக்கும் சட்னி, சாம்பார் போன்ற பொருட்களை சூடேற்றமால் உபயோகம் செய்ய கூடாது. அவை கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை சாப்பிடுவதற்கு சமம் ஆகும்.
தயிர், மோர் ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைக்கலாம். முட்டையை நாம் பண்ணையில் இருந்து வாங்கி வந்தால், 21 நாட்கள் வெளியே வைத்தும், பிரிட்ஜில் வைத்தும் உபயோகம் செய்யலாம். ஆனால், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் குளிர்ந்த நிலையில் வாங்கி வரப்படும் முட்டையை, உடனடியாக பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைப்பது, அதன் சத்துக்களை மாற்றும். உணவில் இனிப்பு சுவையை கொடுக்கும். பிரிட்ஜில் பச்சை மிளகாய் வைக்கலாம். முடிந்தளவு காய்கறிகளை 3 நாட்களுக்கு ஒருமுறை கடைகளில் வாங்கி உபயோகம் செய்வது நல்லது.