மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
மனிதர்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படும் பல பழம் கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பலாப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
பலாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் புற்றுநோய் செல்கள் உருவாவதை தவிர்க்க உதவும். அதேபோல், இதில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பலாப்பழத்தில் புரத சொத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. இதில், உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பலாப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் வலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், பலாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
என்னதான் பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருந்தாலும் சிலர் சாப்பிடாமல் இருப்பது அவர்களது உடலுக்கு நல்லது. பலாப்பழத்தில் சர்க்கரை அதிக அளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பலாப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பலாப்பழத்தில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உடல் எடை அதிகமாக உள்ளவர்களும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பலாப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் எனவே அந்த நபர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.