மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உங்களுக்கு மூட்டு வலி இருக்கா?! அப்போ இதை உடனே பண்ணுங்க.!
முன்பெல்லாம் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த மூட்டு வலி தற்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறியவர்களையும் கூட பாதித்து வருகிறது. மூட்டு வலியை சரி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனால் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.
மூட்டு வலி ஏற்பட ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பு குறைவு மற்றும் சர்க்கரை நோய், காச நோய், வயது மூப்பு, வேலைப்பளு, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, உடல் பருமன் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இந்த மூட்டுவலிக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு உள்ளது. அதன் செய்முறையை பார்ப்போம். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி பின்னர் அதில் சோம்பு, 5 மிளகு, 1 இடித்த பூண்டு பல் சேர்த்து, பின் 5 புதினா இலை, மற்றும் மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து, இதை வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகி வந்தால், நாள்பட்ட மூட்டுவலியும், முழங்கால் வலியும் கூட விரைவில் குணமாகும். அதோடு நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.