மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி.?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களில் ஒன்று தோசை. அதிலும் வகையான வகையான தோசைகளை சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தோசைமாவு
துருவிய பன்னீர் - 2 கப்
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு, நெய் - தேவையான அளவு
முதலில் அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கர மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
அதனுடன் துருவிய பன்னீர் சேர்த்து நன்கு வதங்கியதும் கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான பன்னீர் மசாலா தயார். பின்னர் மெலிதாக தோசை வார்த்து அதன் மேல் பன்னீர் மசாலாவை சேர்த்து பரிமாறினால் சுவையான பன்னீர் மசாலா தோசை தயார்.
இதையும் படிங்க: நாவில் எச்சில் ஊற வைக்கும் செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்வது எப்படி.?