மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்களும் ஆன்லைன் மோசடிக்கு இரையாகாமல் இருக்கணுமா?! இதை படிங்க!!
இன்றைய காலக்கட்டங்களில் ஏமாற்றுபவர்கள் நம்மை விட மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கையாளும் யுக்திகள் கற்பனைக்கும் எட்டாத வகையில் மிகவும் புதுமையானவையாக இருக்கின்றன. அவர்கள் கூறும் பொய்கள் அனைத்தும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க இதோ சில டிப்ஸ்..
சமூக ஊடகங்களில் உள்ள பிரபலங்கள் கூறுவதால், பணத்தை தவறான நபர்களிடம் முதலீடு செய்து பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். யார் என்ன கூறினாலும், ஒரு முடிவை எடுக்கும் முன்பு ஆராய்ந்து செயல்படுங்கள். ஒருபோதும் யாரிடமும், உங்கள் வங்கி கணக்கு விபரங்களையோ, கார்டில் இருக்கும் சிவிவி (CVV) நம்பரையோ கொடுக்க வேண்டாம்.
இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் ரூபாய் 5000 செலுத்தினால் ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற, போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். நம்முடைய பேராசையை பயன்படுத்தி அவர்கள் நம்மை எளிதில் ஏமாற்றுகின்றனர்.
உண்மையில், நீங்கள் முதலீடு செய்யும் தொகை ஒரு மணி நேரத்தில் 10 மடங்கு பெருகுமேயானால், உங்களுக்கு போன் செய்யும் நபர், பணத்தை கடன் வாங்கியேனும் அதனை செய்து கோடீஸ்வரர் ஆகியிருப்பார். உங்களுக்கு அந்த நல்லதை அவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை யோசியுங்கள்!!
எந்த ஒரு இடத்திலும் முதலீடு செய்வதற்கு முன் அதைப்பற்றி நன்றாக விசாரித்து செய்ய வேண்டும். அதற்கான விமர்சனங்கள் பற்றி இணையதளத்தில் பார்த்துவிட்டு பின்பு முடிவு செய்யவும். தெரியாத லிங்க்குகளை மெசேஜிலோ அல்லது மின்னஞ்சலிலோ உங்களுக்கு அனுப்பினால் அதை மறந்தும் கூட கிளிக் செய்து விடாதீர்கள். உங்கள் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுங்கள்.
திருமணத்திற்கான வலையகத்திலும் மோசடி செய்பவர்கள் இருக்கிறார்கள். எனவே எந்த இணையதளத்தை நீங்கள் உபயோகப்படுத்தினாலும், மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தவறுதலாக ஆன்லைன் ஸ்காமில் நீங்கள் சிக்கினால், உடனே தயங்காமல் சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியை நாடுங்கள்.