சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
முகப்பருவால் அவதியுறுகிறீர்களா?.. இன்றே முயற்சித்து பாருங்கள்.. இயற்கை வழியில் அற்புத ரிசல்ட்.!
பெண்களுக்கும், ஆண்களுக்கும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது முகப்பரு பிரச்சனை. சிலர் அதனை கண்டுகொள்வதில்லை என்றாலும், பலரும் முகப்பருவால் அவதியுற்று வருகின்றனர். இன்று முகப்பருக்களை எளிதில் விரட்டும் சில எளிய குறிப்புகள் குறித்து காணலாம்.
ரோஸ் வாட்டர்:
அதிகளவு எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் ஏற்படலாம். சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை அளவை குறைக்க தினமும் 2 முறை ரோஸ்வாட்டரை ஆஸ்ட்ரிஞ்சன்ட் ஆகியவற்றை முகத்தில் தடவி கழுவலாம்.
தயிர் மஞ்சள்:
மஞ்சளும், தயிரும் மருத்துவ குணம் கொண்டது ஆகும். மேலும், காயங்களை குணமாக்கும் தன்மையும் கொண்டது ஆகும். இவை பருக்களை விரட்டியடிக்கும். தயிர் மற்றும் மஞ்சளை குழைத்து பேஸ்ட் போல மாற்றி, அதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழிந்து கழுவினால் முகப்பரு பிரச்சனை குறையும்.
சந்தனம் ரோஸ் வாட்டர் பேஸ்ட்:
சந்தனம் இயற்கையாகவே வழியை குறைத்து, பரு மற்றும் மாசை நீக்கும் சக்தி கொண்டது. சந்தன பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழைத்து, நெற்றி மற்றும் பருக்கள் உள்ள பகுதியில் தடவி, ஒருமணிநேரம் கழிந்து முகத்தை கழுவினால் பரு பிரச்சனை குறையும்.
வேப்பிலை:
வேப்பிலை என்பது தூய்மையான மற்றும் அழுக்கற்ற சருமத்தை வழங்கக்கூடியது ஆகும். மேலும், அது இயற்கையான கிருமி நாசினியும் ஆகும். வேப்பிலையை எடுத்து, அதனை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை ஆறவைத்து முகத்தை கழுவி வரலாம்.
வெள்ளரிச்சாறு:
வெள்ளரிச்சாறு முகத்தில் சுரக்கும் அதிகளவு எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தும். மேலும், குளிர்ச்சியும் தரும். வெள்ளரி சாறுடன், பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருத்தி பஞ்சில் அதனை துடைத்து எடுத்தால் முகப்பரு பிரச்சனை குறையும். குளிர்ச்சியும் கிடைக்கும்.
இயற்கை முறைகள்:
தினமும் கட்டாயம் நீர் அருந்துவது, உடலின் தூய்மையை பேணுவது போல, முகத்தூய்மையையும் பேணுவது.
மன அழுத்தத்தில் இருந்து வெளியேறி உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணிக்காப்பது. துரித உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகளை குறைப்பது சாலச்சிறந்தது.