மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கம் வரலையா..?? தூங்குவதற்கு சிரமப்படுகிறீர்களா?. அப்போ இத படிங்க கண்டிப்பா தூக்கம் வரும்..!!
இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால் அது உடலில் பல நோய்களை உண்டாக்கும்.
தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. சரியான ஓய்வு கிடைக்காமல் உடல் இயங்கிக் கொண்டிருந்தால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே சாப்பிடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது.
இரவு நேரத்தில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இரவில் படுக்கையில் படுத்து தூங்க வேண்டும். ஆனால் படுக்கும் முன்பு சிறிது நேரம் புத்தகம் படியுங்கள் அதுவும் ஆர்வத்தை தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போரடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதனால் படுத்தவுடன் தூங்கி விடலாம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் வைத்து கொள்ளுங்கள். தூங்கும்போது நாளை என்ன செய்யப்போகிறோம் என்ற நினைவில் தூங்காமல், இன்று நடந்தவற்றை நினைத்து தூங்குங்கள் அப்பொழுது தூக்கம் நன்றாக வரும். நாம் நாளை என்ன நடக்கும் என நினைத்து தூங்கினால் கண்டிப்பாக பதட்டத்திலே தூக்கம் வராது.