"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கிராமத்து சுவைமிக்க தட்டு இட்லி செய்வது எப்படி.?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இட்லி மக்களின் அன்றாட காலை உணவில் இரண்டற கலந்து விட்டது. இந்த தட்டு இட்லி என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த தட்டு இட்லி என்பது சாதாரண இட்லியை விட பெரிதாக காணப்படும். சுவை மிக்க தட்டு இட்லி வீட்டிலேயே செய்வது எப்படி? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1 கப்
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 2 கப்
பழைய சாதம்
செய்முறை :
முதலில் உளுந்து, பச்சரிசி, இட்லி, அரிசி ஆகிய மூன்றையும் நன்றாக கழுவிக்கொள்ளவும். அதன் பிறகு அதனை பழைய சாதத்தோடு கலந்து, 4 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டாமல் அப்படியே அரைக்க வேண்டும்.
நன்றாக இட்லி பதத்திற்கு மாவை அரைத்து ,அதன் பிறகு ஊக்கு சேர்த்து 10 மணி நேரம் வரையில் புளிக்க வைக்க வேண்டும். இட்லி சுடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மாவில் சமையல் சோடாவை சேர்த்துக் கொள்ளவும். பின்பு மாவை பெரிய தட்டுகளில் ஊற்றி இட்லி பானையில் வைத்து அவித்து எடுத்தால், சுவையான தட்டி இட்லி ரெடி. எண்ணெய் பொடி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட அனைத்துமே தட்டு இட்லிக்கு சுவையாக இருக்கும்.