மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதை செய்தாலே போதும்!! எப்பேர்ப்பட்ட முகமும் பளிச்சென மாறும்!! சூப்பர் டிப்ஸ்..
வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களை வைத்து உங்கள் முகத்தை எப்படி பளிச்சென மாற்றுவது என்பது பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களும் அதிகம் இருப்பது உண்டு. தனது முகம் பொலிவானதாக இருக்கவேண்டும் என்பதற்காக, பலர் அழகு நிலையம் செல்வது, விலை உயர்ந்த க்ரீம்களை போடுவது என பணத்தை செலவு செய்வதும் உண்டு. ஆனால் வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை வைத்து கூட உங்கள் முகத்தை பொலிவானதாக மாற்றலாம்.
1 . கல் உப்பு:
சிறிதளவு கல் உப்பை எடுத்துக்கொண்டு, அதனுடன்ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதோடு, முகமும் பொலிவுபெறும்.
2 . அரிசி மாவு:
வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஏராளமான சத்துக்கள் அரிசி மாவில் உள்ளது. சிறிதளவு அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ் பூன் தேன் கலந்து, அதனை பசை போல் மாற்றுக்கொள்ளவும். பின்னர் அந்த பசியை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இப்படி செய்துவந்தால், உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி உங்கள் முகம் பளிச்சிடும்.
3 . பாதாம்:
பாதம் பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. சிறிதளவு பாதாமை எடுத்து, அதனை பொடி செய்து, அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவிவர, உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி உங்கள் முகம் பளிச்சிடும்.