2 டீஸ்பூன் பால் 1 கப் ரவை இருந்தால் போதும்.! சுலபமாக மைசூர் பாக்கு செய்யலாம்.!



How to make Mysore Pakku

இப்படி மைசூர் பாக்கு  செய்தால், மிகவும் சுலபமாக நம்மால் செய்ய முடியும். மேலும் அதிகளவிலான பொருட்களும் தேவைப்படாது.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் நிற புட் கலர்

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

தண்ணீர் - ½ கப் 

சர்க்கரை - 1 கப்

பால் - 2 டீஸ்பூன்

நெய் - 60 எம்.எல்

ரவை - 1 கப் 

mysure pakkuசெய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் ரவையை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 4 நிமிடங்கள் வரையில் வறுக்கவும். அதன் பிறகு இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர்  அதே பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி அத்துடன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சர்க்கரை நன்றாக கரைந்த பின்னர், ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

mysure pakku

பின்னர் மஞ்சள் நிற புட் கலரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இப்போது இதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடங்களுக்கு பின்னர் இதனை வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி, ஸ்பூனை பயன்படுத்தி, அதனை சரி சமமாக நிரவி சற்று நேரம் சென்ற பிறகு அதில் கோடுகள் போட்டு பிரித்தெடுத்தால், சுவையான மைசூர் பாக்கு ரெடி.