ரொம்ப டேஸ்டான பன்னீர் கிரேவி செய்வதற்கான சுலபமான வழிமுறை.!
சுவையான பன்னீர் கிரேவி செய்து, சாப்பிட்டு பாருங்கள், இதன் சுவையே தனித்துவம் மிக்கதாகயிருக்கும். மிகவும் சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1\2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1\4 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி
பூண்டு
இஞ்சி
முந்திரிப் பருப்பு
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி
பன்னீர் - 200 கிராம்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரோடு இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதே பாத்திரத்தில் முந்திரி பருப்பு, பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதை மிக்ஸியில் போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய்ப்பொடி, தயிர் ஆகியவற்றை சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெண்ணையை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் ஏலக்காயையும், கிராம்பு, சீரகம் போன்றவற்றையும் சேர்த்து, பின்பு இதில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக கிளறி விடவும். இப்போது இதில் வறுத்த பன்னீரை சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான பன்னீர் கிரேவி தயாராகிவிடும்.