மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாமே ஹோட்டல் ஸ்டைல் தான்.! உருளைக்கிழங்கு குருமாவை இப்படி செய்து பாருங்கள்.!
உருளைக்கிழங்கு குருமா செய்வது மிகவும் சுலபமான காரியம் தான். அதே சமயம் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை ரெசிபி. அந்த உருளைக்கிழங்கு குருமாவை சுலபமாக எப்படி செய்யலாம் என்பது பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் -2
கல்பாசி
பிரிஞ்சி இலை
ஊறவைத்த கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
பூண்டு - 4
மிளகு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
மஞ்சள் பொடி போட்டு, உருளைக்கிழங்கை நன்றாக அவித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு போன்றவற்றை சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதன் பின் இதில் தேங்காயையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
அப்படி அரைக்கும்போது ஊற வைத்துள்ள கசகசாவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன்பின் அதே பாத்திரத்தில், எண்ணெய் சேர்த்து, அதனுடன் தக்காளி, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் அவித்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, உப்பு தேவையான அளவு தூவி, 10 நிமிடங்கள் கொதிக்க விட்டால், ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா தயாராகிவிடும்.