நாவில் எச்சில் ஊறவைக்கும் சூப்பரான ரவா லட்டு.! செய்வது எப்படி.?!
மிகவும் சுவையான, சாஃப்டான ரவா லட்டு செய்வது எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பால் 1/2 கப்
ஏலக்காய் - 4
பொடியாக்கிய சர்க்கரை - 1 1/2 கப்
ரவை - 2 கப்
தேங்காய் துருவல்
பூசணி விதை 1/2 கப்
பாதாம் பருப்பு - 10
முந்திரிப் பருப்பு - 1 கைப்பிடி
நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நெய் ஊற்றி, அந்த நெய்யில் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பூசணி விதைகள் ஆகியவற்றை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும். அதிகப்படியாக நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தற்சமயம் மறுபடியும் நெய் சேர்த்து ரவையை நன்றாக வறுக்க வேண்டும். அடுப்பு மிதமான வெப்பத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சிவப்பு நிறத்தில் மாறினால் போதுமானது. இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பொடியாக்கிய சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரையோடு ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நன்றாக கிளறி விட வேண்டும். அதன் தொடர்ச்சியாக தேங்காய் துருவலை சேர்த்து, வறுத்த நட்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் மெதுவாக பாலை சேர்த்து, கிளறி, சூடு ஆறியவுடன் சற்று நேரம் சென்ற பிறகு உருண்டைகளாக பிடித்தால் , சாஃப்டான ரவா லட்டு தயாராகிவிடும்.