கோவில் அன்னதான புளியோதரை.. அசத்தலான சுவையில் வீட்டிலேயே பொடி செய்வது எப்படி.?
பல்வேறு கோவில்களில் வழங்குவதை போன்ற புளியோதரையை நம்மாலும் செய்ய முடியும். இப்படியான புளியோதரையை செய்வதற்கு தேவைப்படும் புளியோதரை பொடியை அரைத்து செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் ½ டீஸ்பூன்
பெரிய அளவிலான புளி - தேவையான அளவு
வரமிளகாய் -10
எண்ணெய் - 1 டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கைப்பிடியளவு
வெந்தயம் - ½ டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
உளுந்து - ¼ கப்
கடலை பருப்பு - 1 கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை எடுத்துக்கொண்டு, அதனை நன்றாக வறுத்து, அதன் பின்னர் வெந்தயம், மிளகு, தனியா போன்றவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக கருவேப்பிலையையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனியாக எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வரமிளகாயை எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் புளியையும் வறுக்க வேண்டும். பின்பு வறுத்து வைத்துள்ள அனைத்தையும், உப்பு, பெருங்காயம் உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான புளியோதரை பொடி தயாராகிவிடும்.