சுவையான சத்தான கேரட் கீர்.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!
பொதுவாக வீட்டில் செயற்கையான ஜூஸ், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் கொடுப்போம். ஆனால் வீட்டில் உள்ள கேரட்டை வைத்து சுவையான சத்தான கேரட் கீர் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம்பருப்பு - 10
பால் - அரைக்கப்
பாதாம் பவுடர் - ½ தேக்கரண்டி
கேரட் - 3
சர்க்கரை - கால் கப் + இரண்டு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
★முதலில் கேரட்டை நன்றாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் ஒரு பாத்திரத்தில் கால்கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
★கேரட் வெந்ததும் தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
★அத்துடன் பாதாம் பருப்பு, உப்பு, சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
★கீர் பதமாக வந்தவுடன் அதனை இறக்கி சூடாகவோ அல்லது ஜில்லென்று குடித்தால் சுவையாக இருக்கும்.