மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடையில் அருட்பெருங்கொடை.. உடல் சூட்டை தணிக்கும் கம்பங்கஞ்சியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க.!
கோடை காலத்துக்கு ஏற்ற வகையில் உடல் சூட்டை தணிக்கும் கம்பில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அதேபோல இரத்தசோகை இருப்பவர்களுக்கும் இது நல்லது. இன்று கம்பு கஞ்சி செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
கம்பு - அரை கப்,
கேரட் - 200 கிராம்,
பீன்ஸ் - 200 கிராம்,
காலிபிளவர் - 200 கிராம்,
பட்டாணி - கால் கப்,
ஏலக்காய் - 2,
பட்டை - இரண்டு,
கிராம்பு - ஒன்று,
பிரியாணி இலை - ஒன்று,
பூண்டு - ஐந்து பற்கள்,
நல்லெண்ணெய் - 4 கரண்டி,
கடுகு, மிளகு, சீரகம் - அரை கரண்டி,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
எலுமிச்சை பழம் - பகுதியளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
★முதலில் எடுத்துக்கொண்ட கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழைகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கம்பை சுத்தம் செய்து ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
★பின் ஊற வைத்த கம்பை குக்கரில் சேர்த்து கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
★பின்னர் காய்கறிகள் சேர்த்துள்ள கலவையை தனியாக எடுத்து மற்ற பொருட்களுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரைத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும்.
★அரைத்து எடுத்த கஞ்சியை அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
★கம்பு வெஜிடபிள் கஞ்சி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும், இரும்பு சத்து கிடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும், ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்லது, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் புத்துணர்ச்சியாக உணர்வார்கள்.