காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மலச்சிக்கலை விரட்டியடிக்கும் குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?..!
குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு கொண்டுள்ள குடைமிளகாய் செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மேலும், வாயுத்தொல்லையை போக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. குடைமிளகாயில் சுவையான சட்னி செய்வது எப்படி? என இன்று காணலாம்.
குடைமிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
குடைமிளகாய் - 1,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 1,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - 1/4 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - 1/4 கரண்டி.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட சின்ன வெங்காயத்தை தோலை உரித்து, குடை மிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய குடை மிளகாய், தக்காளி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் வதங்கியதும் ஆறவைத்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை வழக்கம்போல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து பரிமாறினாள் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.