தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான சேமியா மசாலா பொங்கல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!
சேமியாவில் ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - இரண்டு கப்
பாசிப்பருப்பு -அரை கப்
நெய் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - 6 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
முந்திரி - 20
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - இரண்டு தேக்கரண்டி
ஏலக்காய், லவங்கம், பட்டை - தேவைக்கேற்ப
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியே வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நான்கு விசிலுக்கு வேக விட வேண்டும்.
★பின் காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
★ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து முந்திரி சேர்த்து கிளற வேண்டும்.
★அடுத்து வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் பொடித்தவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
★இறுதியாக தாளித்த பொருட்களை சேமியாவில் சட்னியுடன் பரிமாறினால் சுவையான சேமியா மசாலா பொங்கல் தயார்.