பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
உடலுக்கு பல சத்துக்களை வாரி வழங்கும் பாலக்கீரை சாம்பார் செய்வது எப்படி?.. குடும்பஸ்தர்களே வாரம் ஒருமுறையாவது சாப்பிடுங்க.!
நாம் உண்ணும் கீரையில் மிகவும் சுவையான மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் கீரையில் பாலக்கீரை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இது புரதச்சத்தை கொண்டுள்ளது. இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை செய்யும். இன்று பாலக்கீரை சாம்பார் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2,
துவரம் பருப்பு - 2 கிண்ணம்,
சின்ன வெங்காயம் - 20,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
தக்காளி - 2,
சாம்பார் பொடி - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
புளி - சிறிதளவு,
கடுகு, உளுந்து - சிறிதளவு,
சீரகம், வெந்தயம் - தலா 1 கரண்டி,
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். புளியை நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கீரையை சேர்த்து, அதனோடு வெங்காயம் & தக்காளியை இட்டு வேகவைக்க வேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் அதனை மசித்து மஞ்சள் தூள், சாம்பார் தூள் போன்றவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் புளி கரைசல், வேகவைத்து எடுத்துக்கொண்ட துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
10 நிமிடம் கழித்து உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு-உளுந்து, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து இறக்கினால் சுவையான பாலக்கீரை சாம்பார் தாயார்.