சுவையான கமகமக்கும் வேர்க்கடலை புதினா சட்னி.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!!



How to Prepare Puthina Chutney

 

உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்கும் வேர்கடலையில் இன்று இட்லி தோசைக்கு சுவையான சட்னி செய்வது எப்படி என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை - 1/2 கப் தேங்காய் துருவல் - சிறிதளவு 
புதினா, கொத்தமல்லி - 1/2 கட்டு 
பச்சை மிளகாய் - 7 
இஞ்சி - சிறிதளவு 
புளி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட புதினா மற்றும் கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 

★பின்னர் அதனை அடுப்பில் பச்சை வாசனை போகும்வரை வறுக்க வேண்டும். கடைகளில் வறுத்த வேர்கடலையாக இருந்தாலும் சிறிதளவு நாம் வறுத்துக் கொள்வது அதன் சுவையை அதிகரிக்கும். 

★எடுத்துக் கொண்ட கொத்தமல்லி, புதினா, வேர்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, புலி ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

★பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான கடுகு, உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்து சட்னியின் மீது ஊற்றி கிளறினால் சுவையான வேர்கடலை புதினா சட்னி தயார்.