மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதட்டின் கருமையை உடனடியாக நீக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?
பொதுவாக போதுமான ஈரப்பதம் இல்லாமல் உதடு வறண்டு போவதால் பலருக்கும் உதடு கருத்துப் போவதுண்டு. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும் காரணமாகும். எனவே நோய் எதிப்பு சக்தியுள்ள உணவுகளை உண்டாலே கூட இந்த உதட்டுக் கருமையை சரி செய்துவிடலாம்.
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவேண்டும். மேலும் பாதாம் எண்ணையை தினமும் உதட்டில் தடவி வரலாம். பாலின் கிரீமுடன் பாதாம் பருப்பின் பொடியை கலந்து உதட்டில் தடவி 3-5 நிமிடங்கள் கழித்து கழுவி விடவேண்டும்.
மேலும் மாதுளைச் சாற்றினை தினமும் இரவில் படுக்கும்போது உதட்டில் தடவலாம். மேலும் எலுமிச்சை சாற்றை உதட்டில் தடவி, 4-5 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவி விட்டு லிப் பாம் போட்டுக்கொள்ள வேண்டும். தயிரை தினமும் உதட்டில் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தாலும் போதும்.
மேலும் உதடு வறட்சியைப் போக்குவதற்கு வெண்ணையை தடவி வரலாம். சர்க்கரையுடன் தேன் கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்தால் இறந்த செல்களை நீக்கிவிடும். பீட்ரூட்டை உதட்டில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால், உதடு அழகான நிறத்தைப் பெறும்.