ஆடம்பரமான திருமணத்தில் அம்பானியின் மகள் அணிந்திருந்த புடவை யாருடையது தெரியுமா?



isha-ambani-wedding-saree

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது. இதற்காக, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான 27 அடுக்கு மாடிகளை கொண்ட பிரம்மாண்ட வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. கண்கவர் மலர் அலங்காரத்தால், அந்தப் பகுதியே நந்தவனம் போல காட்சி அளித்தது. வீடு அமைந்துள்ள வீதி முழுவதும் தோரணங்களால் ஜோடிக்கப்பட்டிருந்தன. 

ambani daughter

ஆசியாவிலேயே பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.

ambani daughter

தன் மகள் திருமணத்திற்காக அம்பானி குடும்பமே மேடையில் ஆடி விருந்தினரை நேரடியாக மகிழ்வித்தனர். மேலும் என்ன தான் கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்து திருமணத்தை நடத்தினாலும் அம்பானியின் மகளுக்கு திருமண புடவை புதிதாக எடுக்கவில்லையாம். திருமணத்தின்போது இஷா அம்பானி அணிந்திருந்த சேலை, அவரது தாயார் நீடா 35 ஆண்டுகளுக்கு முன் அவரின் திருமணதின்போது அணிந்திருந்த சேலை என்பது தெரியவந்துள்ளது.

ambani daughter