எலும்புகளுக்கு உறுதித்தன்மையை அளிக்கும் கேப்பை புட்டு.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!



keppai-puttu-tamil

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையை அளிக்கும் கேப்பை புட்டு எவ்வாறு செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.

தேவையான பொருட்கள் :

ஏலக்காய் - 5 
முந்திரி - 10 
நெய் - தேவைக்கு ஏற்ப 
நாட்டுசக்கரை - ஓர் உழக்கு
தேங்காய்த்துருவல் - ஒரு கப் 
கேப்பை - மாவு ஒரு கப்

செய்முறை :

★முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து நன்றாக வறுக்க  வேண்டும்.

★பின் ஏலக்காயை பொடித்து வைத்த வேண்டும்.

★அடுத்து கேழ்வரகு மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

★சிறிது நேரத்திற்குப் பின் மாவை கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும்.

★இவை நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்க வேண்டும்.

★இறுதியாக நாட்டு சர்க்கரை, வறுத்த முந்திரி மற்றும் பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறினால் கேப்பை புட்டு தயாராகிவிடும்.