"பேட் கேர்ள்" பற்றிய கேள்வி.. கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி.. "அரைவேக்காட்டுத்தனம்" என ஆவேசம்.!
தினமும் தோசை சாப்பிட்டு போரடிக்குதா?.. சுவையான கொத்து தோசை செய்து அசத்துங்கள்..!

தினமும் தோசை செய்து சாப்பிட பிடிக்காதவர்களுக்கு மிகவும் சுவையான கொத்து தோசை எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
முட்டை - 1
தோசை மாவு - 2 கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும். முட்டையை உடைத்து சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்க வேண்டும்.
★அடுத்து தோசை கல்லில் 2 கரண்டி தோசைமாவை ஊற்றி, அடித்து வைத்த முட்டையை தோசை மீது ஊற்றி வேக வைக்க வேண்டும்.
★பின் திருப்பி போட்டு மிதமான தீயில் வேக வைத்த பின், வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
★ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
★வெங்காயம் பாதி வதங்கியதும், தோசை துண்டுகளை சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு வதக்கி, இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் கொத்து தோசை தயாராகிவிடும்.