மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உங்க முகம் பளபளப்பாக மாறணுமா?! அப்போ இதை செய்யுங்க!
எல்லோருக்குமே நம்முடைய முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக பலரும் ரசாயனங்களை பயன்படுத்தி, அதிக செலவு செய்து முகத்தை பொலிவாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சில எளிதான வீட்டுவைத்திய முறையிலேயே முகத்தை பொலிவாக்கலாம்.
அவற்றை இங்கு காண்போம். உங்களுக்கு முகப்பரு இருந்தால் முல்தானி மிட்டி, சந்தனப்பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசவும். இதனால் முகப்பரு நீங்கி முகம் பளபளப்பாகும். புதினா இலையை அரைத்து முகத்தில் தடவ, பருக்களால் வந்த தழும்புகள் மறையும்.
மேலும் கடலை மாவை தயிரில் கலந்து முகத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் குணமாகி முகம் பொலிவடையும். மேலும் தேவையான அளவு கருப்பு மிளகுப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து இரவில் முகத்தில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதை செய்வதால் முகப்பரு மற்றும் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் மாறும். இது ஒரு வீட்டு வைத்திய முறை. இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறைந்தது முப்பது நாட்களுக்கு மேலே கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றினால், நல்ல வித்தியாசத்தை உணரலாம்.