மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதா.? ஐந்து அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.!
தற்போது மாறிவரும் உணவு பழக்கவழக்கத்தால், மக்கள் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் கல்லீரல் பாதிப்பு. குடிப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
உடலில் தென்படும் ஐந்து அறிகுறிகளை வைத்து நமக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறியலாம். அவை கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், ரத்தத்தை சுத்திகரிக்காமல் இருக்கும். அதனால் சிலருக்கு தோல் அரிப்பு ஏற்படும்.
ஒரு சிலருக்கு கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். ஒருகட்டத்தில் மஞ்சள் கமாலையாக மாறும். மேலும் கல்லீரல் பாதிப்பு இருந்தால் மலம் வெளிர் நிறத்தில் இருந்து வெளியேறும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். கல்லீரல் சுத்திகரிக்கும் வேலையை சரியாக செய்யாமல் விட்டால் இவ்வாறு ஏற்படும்.
கல்லீரல் செயலிழந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கு செரிமானம் சரியாக நடக்காது. இதனால் வந்தி ஏற்படும். மேற்கூறிய இந்த ஐந்து அறிகுறிகளும் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்கேற்ற சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும்.