மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சுவையான மில்க் புட்டிங் செய்வது எப்படி.?
நாவில் வைத்ததுமே எளிதில் கரைய கூடிய சுவை மிகுந்த மில்க் புட்டிங் ரெசிபி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 கப்
முட்டை - 3
சீனி - 5 கரண்டி
பாதாம், பிஸ்தா - 10 கிராம்
ஏலக்காய்பொடி - சிறிதளவு
முதலில் பாலை நன்றாக காய்ச்சி நன்கு ஆற வைத்து கொள்ளவும். சீனியை நன்கு பொடியாக்கியும் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் அதனுடன் ஆறிய பாலையும் சேர்த்து நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
அந்த கலவையுடன் பொடித்த சீனியையும் சேர்த்து நன்கு கலக்கி பின் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். நன்கு வெந்ததும் அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் சுவையான மில்க் புட்டிங் ரெடி.