மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீரிழிவு, அனீமியா, புற்றுநோயை தடுக்கும் பாலக்கீரை முட்டை வறுவல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!
நீரிழிவு நோய், அனீமியா வராமல் தடுக்கும் பாலக்கீரை முட்டை வறுவல் எப்படி செய்வது என்பது பற்றி இதுதான் இந்த செய்தித்தொகுப்பு.
பாலக்கீரை ரத்த சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் அனீமியா நோய்வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. ஏனெனில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை மிகவும் உதவுகிறது. மேலும் புற்றுநோய் செல் உருவாகாமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
முட்டை - 3
கருவேப்பிலை - 1 கொத்து
மிளகாய் தூள் - 3/௪ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
★அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைக்கவும்.
★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்த பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
★வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து குழைய வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் பாலக்கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
★இறுதியாக கீரை வதங்கியதும் முட்டை சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும். முட்டையின் பச்சை வாசனை போய் வாணலில் ஒட்டாமல் வரும்வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி நிமிடங்களில் தயாராகிவிடும்.