மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செட்டிநாடு ஸ்டைலில், சுவையான பருப்பு துவையல்.! இப்பவே செய்து பாருங்கள்.!
மணமணக்கும் பருப்பு துவையல் எப்படி செய்வது என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 2 பல்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/4 கப்
செய்முறை :
ஒரு கடாயில் பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் வறுக்கவும். மிக்ஸியை எடுத்து, இந்த கலவையை அதில் போட்டு, தேங்காய் துருவல், உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இறுதியாக பூண்டு சேர்த்து ஒரு முறை சுற்ற விடவும். இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் பருப்பு துவையல் தயார்.