"மாதுளை பழம்" வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.! உண்மையா? பொய்யா.?
மாதுளை பழத்தின் அருமைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இருப்பினும் உடல் எடையைக் குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது என்று பார்க்கலாம். மேலும் இதைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நுபூர் பாட்டீல் என்ன சொல்கிறார் என்றும் பார்க்கலாம்.
மாதுளை பழத்தை தினமும் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டால் உடல் எடை வேகமாக குறையும். ஆனால் முடி வளர்ச்சி மற்றும் நியாபக சக்தியை அதிகரிக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது என்கிறார் நிபுணர். மாதுளை பழத்தில் இயற்கையாகவே வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட், தாதுக்கள் போன்ற ஊட்டச்த்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த பழத்தில் உள்ள சத்துகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, இதயத்தை பாதுகாக்கும். மேலும் மாதுளை பழத்தை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருமடங்கு எடையைக் குறைக்கலாம் என்று எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் கிடையாது. அகவே நம் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்து எடையைக் குறைக்கலாம் என்று நிபுணர் நுபூர் பாட்டீல் அறிவுறுத்துகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் Dr. திலீப் குப்தே கூறுவது என்னவென்றால், மாதுளை பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் அதை முறைப்படி ஆராய்ந்து கவனத்துடன் உபயோகிக்க வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் செய்தி அனைத்தயும் அப்படியே நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.