மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.! ஃப்ரிட்ஜில் இதையெல்லாம் வைக்கிறீர்களா.? இனிமே பன்னாதீங்க.!
ஃப்ரிட்ஜில் உருளைக்கிழங்கு மற்றும் முட்டையை வைப்பது மிகவும் தவறான ஒரு செயல். சில பொருட்களை மட்டுமே வைப்பது நல்லது. இப்பொழுது ஃப்ரிட்ஜ் அனைவருக்கும் முக்கியமான ஒரு பொருளாக விளங்கி வருகிறது. குறிப்பாக முட்டையையும், உருளைக்கிழங்கையும் மட்டும் ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது, அதற்கு என்னக் காரணம் என்று பார்ப்போம்.
சாதாரணமாக அறையின் வெப்ப நிலையில் வைத்திருக்கும் முட்டையை விட, ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை சீக்கிரத்தில் கெட்டு விடும். ஏனென்றால், முட்டையில் உள்ள கருவானது பால் போன்று திரிந்து விடும். இதேபோல் முட்டையின் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால் அந்த முட்டையை பிரிட்ஜில் வைக்க கூடாது. முட்டைகளை கடையில் வாங்கி வரும் போது ஒருவேளை சால்மோநெனல்லா பாக்டீரியா சில முட்டைகளில் இருக்கலாம். இது தெரியாமல் ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அது மற்ற முட்டைகளிலும் பரவி ஆபத்தை விளைவிக்கும்.
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாளைக்கு பயன்படுத்தி வந்தால் கர்ப்பப்பை குடல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே முட்டையையும், உருளைக்கிழங்கையும் ஃப்ரிட்ஜில் வைக்காமல் கிச்சனில் காற்றோட்டமாக வைத்து பயன்படுத்தவும்.
இதேபோல் ஃப்ரிட்ஜில் தேங்காய், மாங்காய் வைப்பது நல்லதல்ல. அப்படி வைக்க வேண்டும் என்றால் தேங்காயை துருவிக் காற்றுப் புகாத டப்பாவில் ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம். தர்பூசணி பழத்தை வெட்டாமல் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வெட்டாமல் வைத்தால் ருசியும் இருக்காது, நிறமும் மாறிவிடும். தர்பூசணியை எப்போதுமே ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அதன் உள்ளே பாக்டீரியா வளர்ச்சி அடைந்து விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதேபோல் தக்காளி, வெங்காயம், பூண்டு, தேன், பிரட், வெண்டைக்காய், பாகற்காய் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்க கூடாது. இதையெல்லாம் வெளியில் வைத்தே பயன்படுத்தலாம். முட்டைகளை சுத்தம் செய்து பிரிட்ஜில் வைக்கலாம் அதே சமயம் நீண்ட நாள் வைத்திருக்கக் கூடாது.
உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் பிரிட்ஜில் வைக்கும் போது சர்க்கரையாக மாறிவிடும். இப்படி மாறிய உருளைக்கிழங்கை சமைக்கும் போது அமினோ அமிலமாக மாறி புற்றுநோயை உருவாக்கும் அளவிற்கு ஆபத்தை விளைவிக்கும்.