தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் காரணமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



reason-for-head-double-suzhi

பொதுவாக மனிதர்களின் தலையில் இரட்டை சுழி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அவ்வாறு இருந்தால் 2 திருமணங்களாகும் என்ற மூடநம்பிக்கை கிராமப்புறங்களில் பரவலாக உள்ளது.

இந்த நிலையில் NHGRI என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியதில், உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேருக்கு இரட்டை சுழி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களுடைய முன்னோர்களின் மரபணு தான் என கூறப்படுகிறது.

Double suzhi

மேலும், ஜோதிட ரீதியாக கூறப்படுவது இரட்டை சுழி உள்ளவர்கள் மனதில் பட்டதை நேரடியாக பேசுபவராகவும், எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவராகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Double suzhi

தலையில் ஒரு சுழி வலமாக இருந்தால் அதிகமான சொந்த பந்தங்கள் பெற்றவராக இருப்பார்கள் எனவும், இரட்டை சுழியில் ஒன்று வலம்புரியாகவும், மற்றொன்று இடம்புரியாகவும் இருந்தால் சில காலம் வறுமையிலும், பின்னாளில் செல்வ செழிப்புடன் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.