பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பளிச்சிடும் வெண்மையுடன் பிரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி?.. உங்களுக்குத்தான் அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சிக்கோங்க.!
இன்றளவில் பிரிட்ஜ் பெட்டிகள் பல வீடுகளில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை வாங்க காண்பிக்கும் ஆர்வம், பராமரிப்பு விஷயங்களில் இல்லை. இதனால் ஓராண்டு ஆனதும் பிரிட்ஜ் பழையது போல தோற்றமளிக்கும்.
அதன் கறைகளை நீக்கி, புதிய பிரிட்ஜ் போல மாற்ற பல வழிகள் இன்றுகின்றன. இன்று பேக்கிங் சோடா, வினிகர், ஸ்ப்ரே, பழைய டூத் பிரஸ் ஆகிய பொருட்கள் கொண்டு பிரிட்ஜை தூய்மைப்படுத்துவது குறித்து காணலாம்.
பேக்கிங் சோடாவை முதலில் எடுத்து நீருடன் கலந்து, அதனை ஸ்ப்ரே பாட்டில் கொண்டு பிரிட்ஜூக்குள் தெளிக்க வேண்டும். பின், வினிகருடன் எலுமிச்சை சாறு சேர்ந்து ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து அதனையும் தெளிக்க வேண்டும்.
சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் ஊறியதும், மென்மையான ஸ்பான்ச் மற்றும் துணைகொண்டு அனைத்து இடத்தையும் சுத்தம் செய்தால், ஸ்பான்ச் பளபளவென இருக்கும். இடுக்கு பகுதிகளுக்கு பிரஷ் பயன்படுத்தலாம்.
குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது பிரிட்ஜை சுத்தம் செய்யலாம். இது நமது பிரிட்ஜை புதுமையாக்குவதோடு மட்டுமல்லாமல், கிருமிகள் பரவுதலையும் தடுக்கும். பிரிட்ஜின் பின்பக்கம் இருக்கும் கண்டர்சரில் இருக்கும் தூசுகளை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும்.
குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறை பிரீஜர் பாக்சில் உள்ள பனித்துகளை வெளியேற்ற கொடுக்கப்பட்ட அமைப்பை கட்டாயம் சொல்லப்படுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பிரிஜ் நல்ல செயல்திறனுடன் உள்ளதா? என்பதை தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் சோதித்துக்கொள்ள வேண்டும்.
ப்ரிட்ஜில் ஏற்படும் துர்நாற்றம் தவிர்க்க புதினா, எலுமிச்சை போன்றவற்றை வைக்கலாம். பிரிட்ஜில் எக்காரணம் கொண்டும் சூடான பொருட்களை வைக்க கூடாது. பால், உணவுகளில் சூடு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தலாம்.