கண் திருஷ்டி நீங்கி, செல்வந்தராக செழிக்க இந்த இரண்டு பொருள் போதும்.!



remedy-by-cardamon-and-tailpepper

கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளுக்கு வால்மிளகு மற்றும் ஏலக்காய் ஒரு அற்புதமான பொருளாக விளங்குகிறது. பொதுவாக பணம் பத்தும் செய்யும், அது இல்லை என்றால் நம்மளை நன்றாக வச்சும் செய்யும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கண் திருஷ்டியும் உங்களைப் போட்டு வாட்டிருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பணம் இல்லாமல், கண்ணோம்பலில் அடிபட்டு வாழ்வது என்பது பெரும் போராட்டம் தான். இந்த காலகட்டத்தில் பணம்தான் எதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லாதவர்களை யாரும் மதிப்பதே இல்லை. அந்த பணம் நமக்கு வருவதற்கு சில முக்கிய பொருள்களைக் கொண்டு மாதந்தோறும் அமாவாசை அன்று இப்படி செய்து வந்தால் நீங்களும் நிச்சயம் செல்வ செழிப்போடு விளங்குவீர்கள். அது என்ன பொருள்? என்று பார்க்கலாம் வாருங்கள். 

Cardamonஇந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் 11 வால்மிளகு, 3 ஏலக்காய், ஒரு கைப்பிடி கல் உப்பு, 3 கிராம்பு மட்டுமே போதுமானது. அமாவாசை தினத்தன்று ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பைக் கொட்டிக் கொள்ளவும். பிறகு அதில் 11 வால்மிளகு, 3 ஏலக்காய், 3 கிராம்பு சேர்த்து வீட்டில் அனைவரின் கண் பார்வை படும் இடத்தில் வைக்க வேண்டும். அமாவாசை முடிந்து அடுத்த மூன்று நாள் கழித்து இதை எடுத்து காலடி படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். 

Cardamonஇப்படி செய்தால் நம்மை தாக்கிய கண்திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும். தீய எண்ணங்கள் கொண்ட நபர்களிடமிருந்து நம்மை பாதுகாத்து, செல்வத்தை அள்ளித் தரும் முக்கிய பரிகாரமாகும். வாழ்க்கையில் நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க மாதம் ஒருமுறை அம்மாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்து வந்தால் போதுமானது.