கை, கால்களில் அரிப்பு வருவது இதனால் தானா.?! இனி உஷாரா இருங்க.!



Simple ways to cure skin itching

சில நபர்களுக்கு அவ்வப்போது உடலில் அரிப்பு உண்டாகும். இது அவர்களுக்கு பல்வேறு நேரங்களில் பலவிதமான சங்கடங்களை ஏற்படுத்தும். மேலும் அவர்கள் அடிக்கடி சொரிந்து கொண்டே இருப்பதால், சருமம் சிவந்து காணப்படும். இது போன்ற நிகழ்வு எதனால் ஏற்படுகிறது? என்பதை முதலில் எல்லோரும் கவனிப்பது அவசியம்.

நாம் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்படும் டிஜர்டண்ட் பவுடர் மற்றும் குளிப்பதற்காக உபயோகிக்கும் சோப்பு ஆகியவற்றால் கூட இது போன்ற நிகழ்வு உண்டாகலாம். அதேபோல சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும், மலச்சிக்கல் பிரச்சனை காணப்பட்டாலும், நம்முடைய சருமத்தில் அரிப்பு உண்டாகலாம். கொசுக்கடி மற்றும் பூச்சிக்கடிகளால் கூட அரிப்பு உண்டாகலாம்.

Life style

இதன் காரணமாக, நாம் அடிக்கடி சொரிந்து கொண்டே இருப்போம். இன்னும் சிலருக்கு இறுக்கமான உடைகளை அணிவதால், சருமத்தில் அழுத்தமுண்டாகி அரிப்பு உண்டாகலாம். அப்படிப்பட்ட நபர்கள் தளர்வான உடைகளை அணிந்து கொள்வது நன்மை பயக்கும்.

நம்முடைய உடலில் அரிப்பு ஏன் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டு, அதனை தவிர்ப்பது மிகவும் நல்லது எளிமையான முறையில் கிடைக்கும் அம்மான் பச்சரிசி, வெற்றிலை, கீழாநெல்லி அருகம்புல் போன்றவற்றால் நம்முடைய உடல் அரிப்பை சரி செய்ய இயலும்.

2 வெற்றிலை, 4 மிளகு, சிறிதளவு அருகம்புல் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி பருகி வந்தால், மிக எளிதில் உடலரிப்பு பிரச்சனை முடிவுக்கு வரலாம். அடுத்தபடியாக 5 மிளகு, 2 வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாறை விழுங்கினால், உடலில் பூச்சி கடியால் ஏற்படும் அரிப்புக்கு சிறந்த மருத்துவமாக அது இருக்கும்.

Life style

ஒரு கைப்பிடியளவு கீழாநெல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக உடலில் தேய்த்து குளித்தால், அரிப்பு சருமத்தில் ஏற்படும் தடிப்பு போன்றவை சரியாகும். 5 கற்பூரவள்ளி இலைகளை எடுத்துக்கொண்டு, அதனை கையால் நன்றாக கசக்கி, அரிப்பெடுக்கும் பகுதியில் தடவி வந்தால், நமைச்சல், அரிப்பு போன்றவை குணமாகும்.

அதேபோல சிறிதளவு திருநீற்றுப்பச்சிலையை எடுத்துக்கொண்டு, அதனை அரைத்து, அந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து, நன்றாக குழப்பி அரிப்பு எடுக்கும் பகுதிகளில் தடவி வந்தால், அரிப்பு குணமாகும். இவை அனைத்தும் நம்மை சுற்றியிருக்கும் மிக சிறந்த மூலிகைகள்.

 இவற்றை பயன்படுத்திக் கொண்டு, அதிகளவில் செலவில்லாமல் நம்மால் அரிப்பு குறித்த பிரச்சனைகளிலிருந்து வெளிவர முடியும். இதையெல்லாம் செய்தும் அரிப்பு குணமாகவில்லையென்றால் அருகிலுள்ள சரும மருத்துவர் கலந்தாலோசித்து, அதன் பிறகு மருத்துவம் செய்யலாம்.