மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உப்பலான சாப்ஃடான பூரி வேணுமா? இந்த முறையில் செய்து பாருங்கள்.!
இனி பூரி செய்யும்போது இந்த முறையை பின்பற்றுங்கள் உப்பலான மற்றும் சாப்டான பூரி கிடைக்கும்.
மிகவும் சாப்டான பூரியை செய்வது எப்படி ?
பூரி மாவை தயார்செய்யும்போது சற்று கூடுதலாக தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதோடு, எண்ணெய், பால் அல்லது நெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் பால் சேர்த்தால், அவை அரை சூட்டிலிருப்பது மிகவும் அவசியம். இவை உங்களுடைய பூரியை மென்மையாக மாற்ற உதவி புரியும்.
மிருதுவான பூரியை எப்படி செய்யலாம்?
மிருதுவான பூரியை தயார் செய்ய, பூரி தயார் செய்யும் மாவோடு, கொஞ்சம் ரவையை சேர்த்துக் கொள்வது நன்று.
பூரிக்கு மாவு தயார் செய்யும் சமயத்தில் பூரி மாவு சற்று கடினமாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக பூரியை தயார் செய்வதற்கு முன்னர் அந்த எண்ணெயில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இறுதியாக அந்த மாவை குளிர்சாதன பெட்டியில் 15 நிமிடங்கள் வைத்த பின்னர் பூரியை தயார் செய்ய தொடங்கலாம்.
பொன்னிறமான பூரி கிடைக்க என்ன செய்யலாம் ?
பூரி பொன்னிறமாக வருவதற்கு அந்த மாவை தயார் செய்யும் போது, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால், பூரி பொன்னிறமாக வருவதற்கு உதவியாக இருக்கும். அதோடு பூரியை தயார் செய்யும்போது துருப்பிடிக்காத கரண்டியை பயன்படுத்திபோடும்போது அந்த கரண்டியால் அழுத்தி பிடித்துக் கொள்ளவும். இப்போது பூரி மிகவும் உப்பலாகவும், பொன்னிறமாகவும் வரும்.