சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இந்த வெயில் காலத்தில் பலருக்கும் வரும் பிரச்னை.! நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!
தற்போதைய வாழ்க்கைமுறையில் பலர் வயிற்று புண் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அதற்க்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்க முறை தான். வயிற்று புண் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும். குடலுக்குள் நாம் சாப்பிடும் உணவுகளால், அதில் உள்ள அதிக அமிலத்தன்மை , காரத்தன்மை , வயிற்றைப் புண்ணாக்கக் கூடிய சில உணவுப் பொருட்கள் உள்ளே சென்றால் அதன் மூலமாக அல்சர் உருவாகிறது.
வயிற்று புண் பிரச்னை நாம் சாப்பிடக் கூட உணவுகளின் மூலமாகவே சரிசெய்துவிடலாம். தினமும் மோர் அருந்தினால் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி புண்ணை குணப்படுத்தும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றக் கூடிய தன்மை மோருக்கு உள்ளது. அதேபோல் தேங்காய் பால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம். சாப்பிட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம் நன்றாக மென்று சாப்பிடவும்.
இரவில் படுக்கும் முன் சீரகம் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவு 8 மணிக்குள் உணவு சாப்பிடுவது நல்லது இரவில் எண்ணெய்யில் பொறித்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அதேபோல், காலையில் சாப்பிட்டு க்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது. தினமும் காலை ஒரு மாதுளை பழம் சாப்பிடுங்கள். மதியம் மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். அகத்திக்கீரை சாறும் சாப்பிடலாம் காய்கறிகள் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காரமான உணவை தவிர்த்துவிடுங்கள். தினமும் ஒரு இளநீர் குடிப்பது நல்லது.
மணத்தக்காளி கீரையை ஒரு பிடி பறித்து நன்கு கழுவி காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக வாயில் போட்டு மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாற்றினை உள்ளுக்குள் இறக்கி கீரையை முழுமையாக சாப்பிடுங்கள். இரண்டே நாளில் வயிற்று புண் சரியாகும். இதனை பலருக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.