மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்மர் ஸ்பெஷல் கம்பங்கூழ்.!! எளிமையான ரெசிபி.!!
வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம என்னதான் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் ஜூஸ்னு குடிச்சாலும் இயற்கையா நம்ம வெயில் காலத்துக்கு குடிக்க வேண்டிய ஒண்ணுன்னா அது கம்மங்கூழ் தான். கம்மங்கூழ் குடிக்கிறதால நமக்கு எக்கச்சக்கமான ஆரோக்கிய பலன் கிடைக்கும். கம்மங்கூழ்ல தயிர் ஊற்றி அது கூட வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய் இல்ல அப்பளம் ஏதாவது ஒன்னு வச்சு குடிச்சா இந்த வெயிலுக்கு இதமா ஜில்லுனு இருக்கும்.
பொதுவா எல்லாருமே கம்மங்கூழ் வெளியில தான் வாங்கி குடிப்பாங்க. கடையில கிடைக்கிற விலைக்கு வீட்டில் செஞ்சி நிறைய பேரு அதை குடிக்கலாம். சிம்பிள் அண்ட் ஹெல்தியான அந்த கம்பங்கூழ எப்டி செய்யலாம்னு வாங்க பார்க்கலாம். இது செய்றதுக்கு 1 கப் கம்பு, 2 கப் தயிர், 3 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் கம்பை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். ஊற வைத்த கம்பை நன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும் அரைத்த கம்பை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து 1/2 மணி நேரம் கை விடாமல் கிளறவும். கெட்டியாகி ஆறிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறாமல் மூடி வைக்கவும்.
பிறகு 8 மணி நேரம் கழித்து நன்றாக கரைக்கவும். அதில் தயிர் சேர்த்து (முதல் நாள் வைத்த பழைய சாதம் இருந்தால்) இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும். நன்றாக கலந்து நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பரிமாறினால் சுவையான கம்மங்கூழ் தயார்.