மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் பிளவர் ஆயில் ஒன்று போதுமே, உடல் எடையைக் குறைக்க.! எப்படி பயன்படுத்தலாம்.?!
நம் உணவு பழக்கம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. காலப்போக்கில் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வாழ்க்கை முறையில் தனது உடல் எடையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. உடல் எடை திடீரென அதிகரித்த பிறகு தான் அதைப் பற்றிக் கவனிக்கிறார்கள். இந்த கவலைக்கு சன் பிளவர் ஆயில் மூலம் தீர்வு வந்து விட்டது.
உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எடையை கட்டுப்படுத்த சூரியகாந்தி எண்ணெய் என்று சொல்லக்கூடிய சன் பிளவர் ஆயில் வாங்கி பயன்படுத்தி வந்தால் எடை குறையும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சூரியகாந்தி எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.
இந்த சன் பிளவர் ஆயிலில் ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம், வைட்டமின் ஈ, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன என்று ஆரோக்கிய ஹெல்த் சென்டரின் மருத்துவ உணர்வியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி கூறுகிறார்.
சூரியகாந்தி எண்ணெயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே மருத்துவரின் ஆலோசனைப் படி இந்த சன் பிளவர் ஆயிலை உணவில் எடுத்துக் கொள்ளும்போது இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.