குட்டீஸ் முதல்... பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் சுழியம்.. சூப்பரா, சிம்பிளா செய்து சாப்பிடுங்கள்.! 



suzhiyam preparation in tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுழியம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

வெல்லம் - முக்கால் கப் 

கடலை பருப்பு - ஒரு கப்

சுக்குப்பொடி - அரை ஸ்பூன் 

துருவிய தேங்காய் - கால் கப் 

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன் 

தண்ணீர் - தேவையான அளவு 

எண்ணெய் பொறிக்க - தேவையான அளவு 

மைதா மாவு - முக்கால் கப் 

suzhiyam

செய்முறை : 

அரை மணி நேரம் கடலைப்பருப்பை ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் வானலியை சூடாக்கி நெய் சேர்த்து, தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

அதே வானலியில் பொடியாக செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் நன்றாக கரையும் வரை கிளறி விடவும். வெல்லம் உருகி பாகுவாக மாறிய பின் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும். 

suzhiyam

நன்றாக கலந்து வேகு ம் வரை கிளறி கொண்டே இருக்கவும். பின்னர், இதில் ஏலக்காய் மற்றும் சுக்கு பொடி சேர்த்து கிளறி பூரணம் சரியான பதத்தில் உருண்டு வந்தவுடன் இறக்கி விடவும். பின்னர், மைதா மாவில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். 

பூரணம் நன்றாக ஆறிய பின் அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் பூரண உருண்டைகளை மைதா மாவு கலவையில் போட்டு நன்றாக மூடி பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சுழியம் ரெடி.