நாவில் எச்சில் ஊற வைக்கும் ருசியான நெத்திலி கருவாடு வறுவல் ரெசிபி.!



tasty-dry-anchovy-fish-recipe

ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க. வீட்ல பழைய சாதம் இருந்தா 
சொர்க்கம் தான்.

தேவையான பொருட்கள்: 200 கிராம் நெத்திலி  கருவாடு, 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1/4 tsp மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மல்லி தூள், 5 பல் பூண்டு, 1 கொத்து கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு

Healthy Foodசெய்முறை: முதலில் சுடு தண்ணீரில் நெத்திலி கருவாட்டை போட்டு நன்றாக ஊற வைக்கவும். பிறகு கருவாட்டை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும் பிறகு கறிவேப்பிலை வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும், கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும். 

Healthy Foodவெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து குறைவாக ஆகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு பிறகு கருவாட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும். கருவாடு நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.