புரதச்சத்து நிறைந்த சத்தான கொள்ளு வடை செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!



tasty-healthy-kollu-vadai-recipe

உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் சத்தான கொள்ளு வடை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சிறுதானிய வகையைச் சேர்ந்த கொள்ளுவில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய கொள்ளு - ஒரு கப் 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
பச்சை மிளகாய் - இரண்டு 
வெங்காயம் - நான்கு 
கொத்தமல்லி - சிறிதளவு 
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
 
முதலில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பின் கொள்ளு பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி கொள்ளு பருப்பை கரகரவென அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம், சமையல் சோடா, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் சூப்பரான கொள்ளு வடை தயார்.